இளம்பெண் கூட்டு பலாத்காரம்... குற்றவாளிகளுக்கு ஜாமீன் தர கூடாது என கலெக்டரிடம் மனு!

 
தஞ்சாவூர் பலாத்காரம்

தஞ்சை பாப்பாநாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கடந்த மாதம் 12ம் தேதி பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் கூட்டு பலாத்காரம்

பின்னர் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் மொத்தம் 6 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் அரசியல் கட்சி நிர்வாகி என்றும் கூறப்பட்டது. கவிதாசன், திவாகர் ,வேல்முருகன், பிரவீன் ஆகிய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கூட்டு பாலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 23 வயது இளம்பெண், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அதில், “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.கைதானவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால், தன் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை'' என, பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு மனு அளித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web