கள்ளக்காதலில் மூழ்கிய கணவர்.. விரக்தியில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம்!

 
நம்பிராஜன்

சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் பகுதியை சேர்ந்த நம்பிராஜன் (வயது 30) என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறார். தண்டையார்பேட்டை முத்தமிழ் பகுதியை சேர்ந்த நவீனா என்ற 30 வயது பெண்ணை நம்பிராஜன் காதலித்து வந்தார். நவீனா பி.சி.எஸ். படித்திருக்கிறார். இவர்களது திருமணம் 2017ல் நடந்தது.இவர்களுக்கு சாய்சுலாஸ் என்ற 6 வயது மகன் உள்ளார்.

கள்ளக்காதல்

இந்நிலையில், நம்பிராஜனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறு அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நவீனாவுக்கு நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நவீனா இது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண்ணுடன் நம்பிராஜன் தொடர்ந்து உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி, சம்பந்தப்பட்ட பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கணவரை பிரிந்து வாழ நவீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், குடும்பத்தினர் நவீனாவை சமாதானப்படுத்தி, ஒன்றாக வாழ அறிவுறுத்துகிறார்கள். ஆனால், கணவருக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் மிகுந்த மனமுடைந்த நவீனா, இரவு வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நவீனாவின் தாய் பிரமலா, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து, கணவர் நம்பிராஜனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web