கணவன் மனைவி தகராறு.. தடுக்கச் சென்ற மாமியாரை மண்வெட்டியால் கொன்ற குடிகார மருமகன்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பட்டாளம்மன் கோயில் வட்டத்தில் வசித்து வரும் முனிசாமி மனைவி காஞ்சனா (57). இந்த தம்பதியினரின் மகள் வரலட்சுமி இவரும் அச்சமங்கலம் செல்வராஜ் மகன் குமரேசன் ஆகிய இருவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. குமரேசன் செல்போன் கடை நடத்தி வந்த நிலையில் ஒரு வருடமாக அதனை விட்டுவிட்டு குடி போதைக்கு அடிமையானதாக தெரிகிறது. இதன் காரணமாக குமரேசன் தனது மாமியார் வீட்டிலேயே தங்கி வசித்து வரும் நிலையில் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம் நேற்று இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குமரேசனுக்கும் அவருடைய மனைவி வரலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இதனை தடுக்கச் சென்ற காஞ்சனாவை ஆத்திரமடைந்த குமரேசன் வீட்டில் வைத்திருந்த மண்வெட்டியால் பின் மண்டையில் பலமாக தாக்கியுள்ளார் இதனால் சுருண்டு விழுந்த காஞ்சனாவை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அனுப்பினர் அப்போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக காஞ்சனா உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து குமரேசனை கைது செய்தனர். கணவன் மனைவிக்கு இடைய தகராறை தடுக்க சென்ற மாமியாரை மருமகன் மண்வெட்டியால் போன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!