ஸ்டோரில் வைக்கப்பட்ட மனித மண்டை ஓடு.. பீதியடைந்த வாடிக்கையாளர்கள்..!!
அமெரிக்காவின் Florida-வில் உள்ள ஒரு பழங்கால கடையில் உண்மையான மனித மண்டை ஓடு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி வாடிக்கையாளர்கள் அடைந்துள்ளனர்.
North Fort Myersல் அமைந்துள்ள ஒரு Thrift ஸ்டாரின் ஹாலோவீன் செக்ஷனில் ஒரு மண்டை ஓடு விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை Anthropologist கவனித்து உள்ளார். அந்த மண்டை ஓடு மனிதனுடையது என அடையாளம் கண்டு அதிர்ந்த அவர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.இதனை தொடர்ந்து புகாரை பெற்ற உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லீ கவுண்டி ஷெரிப் அலுவலக (LCSO) போலீஸ் அதிகாரிகள், குறிப்பிட்ட கடையினுள் நுழைந்து அந்த மனித மண்டை ஓட்டை பரிசோதனை செய்வதற்காக மீட்டு எடுத்து சென்றுள்ளனர். அதிகாரிகள் வந்து விசாரித்த போது சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட சேமிப்புக் கிடங்கில் குறிப்பிட்ட இந்த மண்டை ஓடு இருந்ததாக கடை உரிமையாளர் கூறி இருக்கிறார்.
இந்த தகவலை Lee County Sheriff’s Office போலீஸ் அலுவலகம் தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கிறது. மேலும் தங்களது துப்பறியும் அலுவலர்களின் அப்சர்வேஷன்களின் அடிப்படையில், கைப்பற்றப்பட்ட அந்த மண்டை ஓடு ஒரு மனிதனுடையது என்று நம்பப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக கூடுதல் தகவல்களை தெரிவித்துள்ள LCSO கேப்டன் Anita Iriarte, ஃப்ளோரிடாவின் நார்த் ஃபோர்ட் மியர்ஸில் உள்ள நார்த் கிளீவ்லேண்ட் அவென்யூவில் உள்ள பாரடைஸ் விண்டேஜ் மார்க்கெட்டில் இந்த மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்டிருக்கும் அந்த மண்டை ஓடு குறித்து மேலும் சில தகவல்களை LCSO அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இந்த மண்டை ஓடு உண்மையில் மனிதனுடையது தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அது முழுமையாக பரிசோதிக்கப்படும். இந்த மண்டை ஓடு சுமார் 75 வருடங்கள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மண்டை ஓட்டில் எந்த காயமும் இல்லை என்றும் இந்த மண்டை ஓடு சந்தேகத்திற்கிடமான வகையில் பாதுகாக்கப்பட்டதாக சந்தேகப்படுவதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இந்த வழக்கு சந்தேகத்திற்குரியது அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ளோரிடா மாகாண சட்டத்தின் கீழ், “எந்தவொரு மனித உறுப்பையும் அல்லது திசுக்களையும் தெரிந்தே வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது". இந்த சட்டத்தின் கீழ் கண்கள், கார்னியா, சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம், எலும்புகள் மற்றும் தோல் ஆகியவை வருவது குறிப்பிடத்தக்கது.