நிலவில் பெரிய பள்ளம் கண்டுபிடிப்பு.. குஷியில் விஞ்ஞானிகள்!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி நிலவுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டு, அதன் பணியைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இவை புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்து வருகிறது. அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், நிலவின் தென் துருவத்தில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு அருகில் 160 கிமீ அகலத்திற்கு பெரிய பள்ளம் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
தென் துருவ-எய்ட்கன் படுகையை உருவாவதற்கு முன்பு பள்ளம் உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர், மேலும் பள்ளம் குப்பைகளால் நிரப்பப்பட்டு அரிக்கப்பட்டுவிட்டது. சந்திரனில் புதைந்துள்ள பொருட்களை ஆய்வு செய்யும் அரிய வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு பிரக்யான் ரோவர் வழங்கியுள்ள நிலையில் இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பள்ளத்திலிருந்து வரும் பண்டைய தரவுகள் சந்திரனின் ஆரம்பகால வரலாறு மற்றும் தனித்துவமான உருவாக்கம் பற்றிய நமது புரிதலை மாற்றக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!