மத்திய அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

 
மத்திய அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?


தமிழகத்தில் மத்திய அரசின் கல்வித் உதவி தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும்,11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

மத்திய அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?


விருப்பமும், தகுதியும் உள்ள மாணவ, மாணவிகள் நவம்பர் 15ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவம்பர் 30ம் தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

மத்திய அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?


புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web