அடுத்த அதிர்ச்சி... உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு.. கனமழை.. பெருவெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்; 14 பேர் பலி! கேதார்நாத்தில் தவிக்கும் 1000 பயணிகள்!
கேரளத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு சாலைகளும், முக்கிய சதுக்கங்களும், நகரங்களும் நீரில் மூழ்கியது. சில இடங்களில் தண்ணீர் மற்றும் குப்பைகள் வீடுகளுக்குள் புகுந்தது. தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
உத்தரகாண்டில் பல ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால், வெள்ளம் மற்றும் வீடு இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கேதார்நாத் யாத்திரை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. மலையேற்றப் பாதை கோரபரவ், லிஞ்சோலி, பாடி லிஞ்சோலி மற்றும் பிம்பாலி ஆகிய இடங்களில் கற்பாறைகளால் தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
கேதார்நாத் நடைபாதையில் மேக வெடிப்பு மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் காணாமல் போயுள்ளனர். கேதார்நாத் தாமில் இன்னும் 1000 ஆன்மிக சுற்றுலா வந்திருந்த யாத்ரீகர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஸ்ரீ கேதார்நாத் யாத்ரா வழித்தடத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்க, SDRF உத்தரகாண்ட் வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரகாசியில் கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சாமோலி, ருத்ரபிரயாக், டேராடூன், பாகேஷ்வர் மற்றும் நைனிடால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தரம்பூர் எம்எல்ஏ வினோத் சாமோலி, மோதர்வாலா, டகோட்டா, டவுட்வாலா, நௌகா போன்ற பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டார். அப்பகுதி மக்களிடம் சேதம் குறித்து தகவல் பெற்று, பட்டியலை தயாரிக்க தாலுகா அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி வழங்குதல்.கனமழை காரணமாக ஹரித்வார் புறவழிச்சாலை அருகே உள்ள சவுத்ரி காலனியில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான தெருக்கள் குளம் போல் காட்சியளித்தன.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா