துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. அமெரிக்காவில் 15 வயது சிறுவன் வெறிச்செயல்!
அமெரிக்காவின் சியாட்டிலின் தென்கிழக்கே உள்ள பால் சிட்டியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனே அந்த வீட்டுக்கு வந்தார். அப்போது, 3 குழந்தைகள் உட்பட 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொரு பெண் காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்டவர்கள் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!