வீடுகளில் மின்சாரம் இல்லை! உண்ண உணவும் இல்லை! ஆசிரியர்களின் பரிதாப நிலை!

வீடுகளில் மின்சாரம் இல்லை! உண்ண உணவும் இல்லை! ஆசிரியர்களின் பரிதாப நிலை!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். பல கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் அங்கு ஆசிரியர்களுக்கு நான்கு மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் உடனடியாக சம்பளம் வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளில் மின்சாரம் இல்லை! உண்ண உணவும் இல்லை! ஆசிரியர்களின் பரிதாப நிலை!

அவர்களுடைய கோரிக்கையில் தொடர்ந்து நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் தங்கள் குழந்தைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க இயலவில்லை. பசி தங்கள் குடும்பங்களை அச்சுறுத்தி வருகிறது. “அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

வீடுகளில் மின்சாரம் இல்லை! உண்ண உணவும் இல்லை! ஆசிரியர்களின் பரிதாப நிலை!

அவர்கள் வீட்டு உபயோக பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்.
இனி அவர்களிடம் விற்க எதுவும் இல்லை. பல ஆசிரியர்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூட பணம் இல்லாததால் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ” எனத் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 18000 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர், இதில் 10000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web