இன்று 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இந்நிலையில் வங்க கடலில் சென்னையில் இருந்து தென்கிழக்கே 940 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று நவம்பர் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை இது நோக்கி நகரும். இதன்காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.
இதன்படி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டு உள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக போதிய முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கனமழை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையொட்டி இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!