ரூ.50 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா... சென்னை விமான நிலையத்தில் 3 பேர் கைது!

 
கஞ்சா

சென்னை விமான நிலையத்தில், ரூ.50 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பொருட்களை  பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

கஞ்சா

சமீப காலங்களாக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கடத்தி வரும் போக்கு அதிகரித்து வருகிறது. அதே போன்று கஞ்சா உட்பட உயர் ரக போதைப் பொருட்களின் தலைமையகமாக தமிழகம் விளங்குகிறதோ என்று சொல்லும் அளவுக்கு போதைப் பொருட்களின் சர்வதேச கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் தமிழகத்தில் இருந்து வருகிறது.  இந்நிலையில், பாங்காக்கில் இருந்து உயர் ரக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

கஞ்சா

சென்னையை சேர்ந்த முகமது யூசுப், ஆருண் ஆகிய சகோதரர்களும், பரூக் என்பவரும் பலகார பொருட்களோடு கலந்து உயர்ரக கஞ்சாவை பொட்டலங்களாக மாற்றி கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web