முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
ஹேமந்த் சோரன்
 

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்ஜண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமத் சோரன் மீது நில மோசடி புகார்கள் சுமத்தப்பட்டது. குறிப்பாக போலி ஆவணங்களை தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை குறைந்த விலைக்கு வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, சட்டவிராத பணப்பரிமாற்ற புகாரில் கடந்த ஜனவரி மாதம் அவரை கைது செய்தது. 

ஜார்கெண்ட்  முதல்வர் ஹேமந்த்


இதனால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரன், ஜாமீன் வழங்கக் கோரி பலமுறை மனு தாக்கல் செய்தார். குறிப்பாக மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் போல் தனக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும், என அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!


இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 5 மாதங்களுக்கு பிறகு ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து வெளியே வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web