ரூ.165 கோடி மதிப்புள்ள ஹெரோயின் கடத்தல்.. 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

 
இலங்கை போதைப்பொருள்

இலங்கை கடற்படையினரால் இலங்கையின் மேற்கு ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 165 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஹெரோயின் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகுடன் சந்தேக நபர்கள் இலங்கையின் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலதிக சோதனைகளின் போது காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகில் இருந்து 165 கோடி ரூபாய் மதிப்புள்ள 66 கிலோ 840 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கையின் மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப் பொருள்கள் அடுத்த கட்ட விசாரணைகளுக்காக போலீஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வேதாரண்யம் கடல் மார்க்கம் வழியாக இலங்கைக்கு ஹெராயின் கடத்தப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை ரூ.17,483 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web