தமிழர்களுக்கு உதவி எண்கள் ... மியான்மர் நிலநடுக்கம்!

மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருப்பவர்கள் 18003093793 என்ற எண்ணிலும், வெளிநாட்டில் இருப்பவர்கள் +918069009901 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் நேற்று 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளன. தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. மேலும், பாங்காக் நகரில் சில வானுயர்ந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் மேலும் உயிர்ப்பலி அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!