அமெரிக்காவில் கடும் பனிப்புயல்... 4 பேர் உயிரிழப்பு... 2,100 விமானங்கள் ரத்து!

 
பனிப் பனி புயல்

அமெரிக்காவில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையிலான கடுமையான பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் பாதிப்பு காரணமாக 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகவே பனிப்புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவும் காணப்படுகிறது.

விமானம்

கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த புது வருடத்தில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பால் 2,100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா மற்றும் மில்வாகீ பகுதிகளில் 4 பேர் மரணம் அடைந்து உள்ளனர். கடுமையான பனிப்பொழிவால் சாலை மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பனிப்புயல்

லூசியானா மாகாண பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. அந்த மாகாண கவர்னர் ஜெப் லாண்ட்ரி, அடுத்த 7 நாட்களுக்கு கடுமையான குளிர் இருக்கும். அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

இதே போன்று ஜார்ஜியா மாகாணத்தின் சவானா நகர மேயரும், பருவகால புயல்கள், பனி மற்றும் அடர்பனியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web