தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதிகளில் கனமழை... விவசாயிகள் மகிழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை பொருத்தமட்டில் மழையை நம்பியே புரட்டாசி மாதத்தில் மானாவாரி விவசாயத்தை வழக்கமாக செய்வதுண்டு. இந்தாண்டும் புரட்டாசி மாதம் துவக்கத்திலேயே இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நிலத்தை உழவு செய்து பாசி, உளுந்து, கம்பு, சோளம், மக்காச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
கடந்த சில தினங்களாக லேசான மழை அவ்வப்போது பெய்து வந்த நிலையில், இன்று காலை முதலே வானம் வெயிலின் தாக்கமின்றி மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது விளாத்திகுளம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழையை மட்டுமே நம்பி பயிர் செய்து பல நாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!