கனமழை.. பெருவெள்ளம்... முதல்வர் நிதிக்கு கோடிகளைக் குவிக்கும் தெலுங்கு நடிகர்கள்.. முழு லிஸ்ட்!
நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், நடிகர்கள் பவன்கல்யாண், சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்., பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு ஆகியோர் ரூ.1 கோடி நிவாரண நிதி கொடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் வெள்ளப்பாதிப்புகளால் இது வரை 33 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், பிரபாஸ், சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கோடிகளில் உதவி வருகின்றனர். இரு மாநிலங்களிலும் பெய்த பெருமழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ள நிலையில், நடிகர்களைத் தவிர 'கல்கி 2898 ஏடி' தயாரிப்பாளர்களும் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
ஜூனியர் என்டிஆர் தனது X தளத்தில் தாராளமாக நன்கொடை அளித்ததை குறித்து " வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்துள்ளார். கடும் மழையால் இரண்டு தெலுங்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் நான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளேன். தெலுங்கு மக்கள் விரைவில் இந்த பேரிடரில் இருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என் தரப்பில், நான் அறிவிக்கிறேன். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ50 லட்சம் நன்கொடை அளித்து, வெள்ளப் பேரிடரில் இருந்து நிவாரணம் பெற இரு தெலுங்கு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இடைவிடாத மழை தொடர்ந்து மாநிலங்கள் முழுவதும் பேரழிவை ஏற்படுத்துவதால், பரவலான வெள்ளத்திற்கு வழிவகுத்தது. இதுவரை சுமார் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பல ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளம், குறைந்த அழுத்த அமைப்பால் முக்கிய சாலைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளன
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா