வலுக்கும் மழை... புயல் எதிரொலி... இன்று ரயில் சேவை நேரத்தில் மாற்றம்... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 
ரயில்

இன்று பிற்பகல் ஃபெங்கல் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், ஃபெங்கல் புயலின் வேகத்தை கருத்தில் கொண்டு, பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று ரயில் சேவை நேரங்களில் மாற்றம் இருக்கலாம் என தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

ரயில்

கரூர் ரயில் நிலையத்தில் நேற்று அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பார்வையிட்டு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய நுழைவு வாயில், நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்துமிடம், பயணிகள் காத்திருக்கும் அறை, லிஃப்ட் வசதி ஆகியவை மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஃபெங்கல் புயலின் வேகம் அதிகமானால் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்களின் நேரம் மாற்றம், ரத்து செய்யும் நடைமுறைகள் பின்பற்ற வாய்ப்புள்ளது” என்றார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web