தூத்துக்குடியில் கனமழை... வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது!

 
தூத்துக்குடியில் கனமழை... வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு செக்காரக்குடி தரைப்பாலம் மூழ்கியது. 

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தூத்துக்குடி

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் வெயில் அதிகமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் சுமார் 2.30 மணிக்கு மேல் புதுக்கோட்டை அருகே உள்ள செக்காரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. இதனால் அங்கு மகிழம்புரம் பகுதியில் உள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

இதன் காரணமாக செக்காரக்குடி மகிழம்பூ ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், செக்காரக்குடி செல்லும் தரைப்பாலம், கொம்புக்காரநத்தம் தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். மாணவா்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிபட்டனா். எனவே, மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனா்.

இன்று  9 மாவட்டங்களில் கனமழை !! கவனமா இருங்க மக்களே!!

இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து உள்ளது. சாயர்புரம் பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இ்ப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தளவாய்புரம், கல்லம்பரும்பு, மகிழம்புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். கனமழை காரணமாக செக்காரக்குடி ஊருக்கு வருகின்ற வழியிலுள்ள தாம்போதி பாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

இதனால் 64 மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் செக்காரக்குடியில் தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு  ஊராட்சி மூலம் சாப்பாடு வழங்கப்பட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர்  முயற்சியால் மழை குறைந்ததும் இரண்டு வேன்கள் மூலம் இரவு 8:30 மணியளவில் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web