வரலாறு காணாத கனமழை.. 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!
திரிபுராவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவால் திரிபுராவில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் சுமார் 17 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Given the flood situation in Tripura, the central govt, under the leadership of Modi Ji, has approved the release of ₹40 crore in advance, as the central share from SDRF, to provide relief to the affected people. The 11 NDRF teams, 3 columns of the Army, and 4 helicopters of the…
— Amit Shah (@AmitShah) August 23, 2024
இதன் காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 450 நிவாரண முகாம்களில் சுமார் 65 ஆயிரத்து 500 பேர் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு, அவர்களின் தேவைக்கேற்ப வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் திரிபுரா மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நிவாரணமாக ரூ. 40 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதில், “திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசின் பங்கான ரூ.40 கோடியை முன்கூட்டியே வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. " "தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவத்தின் 11 குழுக்கள் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன." இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்துடன் திரிபுராவில் உள்ள நமது சகோதர சகோதரிகள் தோளோடு தோள் நின்று போராடுவதை நீங்கள் காண்பீர்கள். என்று குறிப்பிடப்பட்டுள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!