கனமழை... இன்று தஞ்சாவூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!
அதே போன்று சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. முக்கிய ஏரிகள் நிரம்புகின்றன. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் முக்கிய அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் கூடுதலாக தற்போது வரை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் 28-ம் தேதிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உருவாகும் வானிலை மாற்றங்கள் பொதுவாக தமிழகத்தின் வடக்கு பகுதி அல்லது ஆந்திராவின் தெற்கு பகுதியை நோக்கி நகரும். காற்று நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்.. சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!