இன்று இந்த 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான அலெர்ட் | பத்திரம் மக்களே... பாதுகாப்பா இருங்க!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

இன்று தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்திரம் மக்களே.. மழைக் காலங்களில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும், முதியவர்களையும் தனியே வெளியே அனுப்பாதீங்க.

டகிழக்கு பருவமழை காரணமாக தென் மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் இன்று தமிழகத்தின்  4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

மழை

இத்துடன் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று, காலை அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றூ நவம்பர் 25ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.

இது வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

குறிப்பாக  மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.

கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web