உறைய வைக்கும் வீடியோ... நிலநடுக்க நேரத்தில் தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி!

 
உறைய வைக்கும் வீடியோ... நிலநடுக்க நேரத்தில் தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி! 

 
மியான்மரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் ரயில் பாலங்கள் குலுங்கின. கட்டிடங்கள் சரிந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 1000பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்ணின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் மற்றும் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின் பாதிப்பு பெரிதளவில் காணப்படுகிறது .

அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிடங்களில் இருந்து உடனடியாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அத்துடன் நைபிடாவில் உள்ள மருத்துவமனை முக்கிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து கிங் சுலலொங்கார்ன் நினைவு மருத்துவமனை மற்றும் BNH மருத்துவமனையிலிருந்து நோயாளிக்கு வீல் சேர்களில் அருகில் உள்ள பூங்காவுக்கு இடம் மாற்றப்பட்டனர்.

அந்த நேரத்தில் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவ ஊழியர்கள் உதவியுடன் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் தெருவிலேயே குழந்தையை பெற்றெடுத்தார் இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தாய்லாந்து பிரதமர் பாய்டொங்க்தர்ன் ஷினவித்ரா உடனடியாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி நிலநடுக்க பாதிப்பு பெரிதாக இருக்கக்கூடிய பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web