பைக்குள் நேருக்கு நேர் மோதி விபத்து... போலீஸ் ஏட்டு பலி!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் முத்தையா (38). இவர் கூடங்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரான மறுகால்குறிச்சியில் இருந்து தான் பணிபுரியும் கூடங்குளம் காவல் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கூடங்குளம் விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் செல்லும்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவரது மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் முத்தையா பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முத்தையாவின் உடலை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து தகவலறிந்த கூடங்குளம் போலீசார், முத்தையா உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!