ஆசிரியர் தினம்.... ஆசிரியர்களை கொண்டாடுவோம்... வருங்காலத்தை வளமாக்குவோம்!

 
ஆசிரியர் தினம்
 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது பழமொழி. ஒருவரது வாழ்வில் தாய், தகப்பனுக்கு அடுத்த இடம் ஆசிரியர்களுக்கு தான். தெய்வத்துக்கு முந்தைய இடத்தில் இருப்பதில் இருந்து ஆசிரியர்களின் உயர்வை உணரலாம்.  ஆசிரியரின் ஆசிர்வாதத்தால் தான்  அறியாமையில் இருந்து நகர்த்தி அறிவை புகட்டுகின்றனர்.  இன்று ஆசிரியர் தினத்தில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.  

ஆசிரியர் தினம்

இந்தியாவின்  குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளும் அனுசரிக்கப்படுகிறது.  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி   சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888  செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்தார். பாரத ரத்னா டாக்டர் ராதாகிருஷ்ணன்  ஒரு சிறந்த ஆசிரியர். ஒருமுறை அவரது பிறந்தநாளை சீடர்கள் ஒன்றாகக் கொண்டாட நினைத்தபோது ராதாகிருஷ்ணன் எனது பிறந்தநாளைத் தனித்தனியாகக் கொண்டாடாமல் ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் பெருமைப்படுவேன் எனக் கூறினார். அதன்படி  1962ல்  முதல் முறையாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

ஆசிரியர் தினம்
  டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது வாழ்வின் முக்கியமான 40 ஆண்டுகளை ஒரு ஆசிரியராக நாட்டுக்கு அளித்தவர்.  உண்மையான ஆசிரியர் சமுதாயத்திற்கு சரியான திசையை வழங்குவதற்காக பணிபுரிகிறார் எனக் கூறினார். ஒருவரின் வாழ்க்கையை எதிர்கொள்ள வாழ்க்கையை சீர்படுத்துவதில் ஆசிரியரின் பங்களிப்பு அவசியமாகிறது.   
பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு  மலர்கள், இனிப்புகள், சாக்லேட்கள்  கிரீட்டிங் கார்டுகளை வழங்கி  தங்களது நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்கின்றனர்.   இன்றைய தினம் பள்ளிகளில்   பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப்படும்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web