சூப்பர்... இனி ‘சான்றிதழ்’ தேவையில்ல... வணிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

 
கட்டிடம்


தமிழக அரசு சிறு குறு வியாபாரிகளுக்கான அசத்தல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019ன் படி அனைத்து வகையான வணிக பயன்பாட்டு கட்டடங்களும் கட்டட முடிவு சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் என அறிவித்திருந்தது.  இதனை பெரு வணிகர்கள் மட்டுமல்ல சிறு வணிகர்களும் தங்கள் வணிக கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்றிதழ் பெற வேண்டும். அதன் பின்னர் தான் தங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்ற விதி அமலில் இருந்து வந்தது.  

தமிழக அரசு


இந்த விதிமுறையால் சிறு வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், உடனடியாக  இந்த விதியை தளர்த்த வேண்டும் என வணிகர்கள் சார்பில்  கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.  இதனை தொடர்ந்து சிறு வணிகர்களின் நலன் கருதி, தமிழக சட்டமன்றப் பேரவையில்  ஜூன் 21ம் தேதி  தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ஓர் சட்டதிருத்தத்தை கொண்டுவந்தார்.

இந்த சட்டத்திருத்தத்தின் படி சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் 300 சதுர மீட்டர் மொத்த கட்டட பரப்பளவில். 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் சிறு வணிகக் கட்டடங்களுக்கு, கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக  அறிவித்தார். இது குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web