சூப்பர்! இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்த ஸ்டாலின்!

 
சூப்பர்! இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்த ஸ்டாலின்!


இந்தியாவில் அமைந்துள்ள மாநில முதல்வர்களின் செல்வாக்கு குறித்து ‘சி.என். ஒ.எஸ். ஒபினியோம்” அமைப்பு நடத்திய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் நாட்டின் சிறந்த முதலமைச்சர்களாக 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்றவர் என அறிவித்துள்ளது.

சூப்பர்! இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்த ஸ்டாலின்!


இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றுள்ள நிகரப் புள்ளிகள் 67 . இதில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 79 சதவீதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
12 சதவீதம் பேர் மட்டுமே அவருடைய செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.திருப்தி இல்லை என்று கூறுபவர்களைக் கழித்து மீதமுள்ளவர்கள் மட்டுமே நிகர ஆதரவாளர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

சூப்பர்! இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்த ஸ்டாலின்!


தமிழக முதல்வரை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மக்கள் செல்வாக்கு பெற்ற சிறந்த முதலமைச்சர்களில் 2வது இடம் பிடித்துள்ளார்.
3 வது இடத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், 4 வது இடத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் 5ம் இடத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மாவும் உள்ளனர்.

From around the web