மகிழ்ச்சி! இந்தியாவில் குறையத் தொடங்கும் கொரோனா !

 
மகிழ்ச்சி! இந்தியாவில் குறையத் தொடங்கும் கொரோனா !


உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தடுப்பூசிகள் காரணமாக பரவலாக கட்டுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.

மகிழ்ச்சி! இந்தியாவில் குறையத் தொடங்கும் கொரோனா !

அக். 11முதல் 17 வரையிலான கால கட்டத்தில் இந்தியாவில் கொரோனா தாக்கம் 18 சதவீதம் குறைந்து வருகிறது. உயிரிழப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த ஒரு வார காலத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சம் . உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46000பேர். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் 18 சதவீதம், மேற்கு பசிபிக் நாடுகளில் 16 சதவீதம் குறைந்துள்ளது.உயிரிழப்பில் ஆப்பிரிக்கா நாடுகளில் 23 சதவீதமும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 19 சதவீதமும், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் 8 சதவீதமும் குறைந்துள்ளது.

மகிழ்ச்சி! இந்தியாவில் குறையத் தொடங்கும் கொரோனா !


இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24கோடி. உயிரிழப்பு 49 லட்சம்.அக்19 நிலவரப்படி உலக சுகாதார அமைப்பு பிராந்தியங்களில் ஆல்பா வகை தொற்று 196 நாடுகளிலும், பீட்டா வகை தொற்று 145 நாடுகளிலும், காமா வகை தொற்று 99 நாடுகளிலும், டெல்டா வகை தொற்று 193 நாடுகளிலும் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

From around the web