சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து..” ட்விட்டரில் நடிகர் விஜய் வாழ்த்து!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனரும், நடிகருமான விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) November 8, 2024
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தவெக மாநாட்டிற்கு முன்பு வரை தவெக தலைவர் விஜய்யை தம்பி என பாசத்தோடு அழைத்து வந்தார். அதன் பிறகு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநாடு முடிந்து தவெக கொள்கைகளை விஜய் அறிவித்தற்கு பிறகு கடுமையாக விமர்சனம் செய்தார். “தமிழ் தேசியமும், திராவிடமும் எப்படி ஒன்றாகும்.? ஒன்று சாலையின் அந்த பக்கம் நிற்க வேண்டும். இல்லை அந்த பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து விடும்” என சீறினார் சீமான். அரசியல் களத்தில் எதிரெதிர் கொள்கைகளை கொண்டிருந்தாலும் சீமான் பிறந்தநாளுக்கு விஜய் , ‘சகோதரர் சீமானுக்கு வாழ்த்துக்கள்’ என கூறியுள்ளார். இத்தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!