10, 12ம் வகுப்புகளுக்கு மார்ச்சில் பொதுத்தேர்வு!

 
10, 12ம் வகுப்புகளுக்கு மார்ச்சில் பொதுத்தேர்வு!


தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன. நவம்பர் 1ம் தேதி 1ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

10, 12ம் வகுப்புகளுக்கு மார்ச்சில் பொதுத்தேர்வு!

இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற உலக பெண் குழந்தைகள் தினவிழாவில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாடினார்.
அதில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் வராது.

10, 12ம் வகுப்புகளுக்கு மார்ச்சில் பொதுத்தேர்வு!

மேலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வினையும், அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வினையும் நடப்பாண்டில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இப்போதிருந்தே தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றறிக்கை முதல்வரின் அனுமதியுடன் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். எனக்கு மகள்கள் கிடையாது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் நமக்கு மகள்கள் தான் என மனைவியிடம் கூறியுள்ளேன். இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். படிப்பதற்கு வறுமை தடையாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

From around the web