அதிர்ச்சி! சிறுமி வயிற்றில் அரை கிலோ முடி !

 
அதிர்ச்சி! சிறுமி வயிற்றில் அரை கிலோ முடி !

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் காட் டாட் சாலையில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி. இவர் அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் வீட்டு வேலை செய்து இவரை காப்பாற்றி வருகிறார்.

அதிர்ச்சி! சிறுமி வயிற்றில் அரை கிலோ முடி !

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமி உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து உடல் எடையும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்த்தனர். ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் சிறுமியின் வயிற்றில் முடி உருண்டை இருப்பதை உறுதீ செய்தனர்.

அதிர்ச்சி! சிறுமி வயிற்றில் அரை கிலோ முடி !

இதனை அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க முடியும் என்பதால் அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது. சிறுமி வயிற்றில் இருந்து சுமார் அரை கிலோ முடி உருண்டை அகற்றப்பட்டது.சிகிச்சை அளித்த மருத்துவர் இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் சிறுமிக்கு மேற்கொள்ளப்படும் இரண்டாவது அறுவை சிகிச்சை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இதே போல் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுமிக்கு மன அழுத்தம் காரணமாக முடி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு மன அழுத்தம் அதிகமானால் முடியை பிடுங்கி சாப்பிட்டு விடுவார்.

அதிர்ச்சி! சிறுமி வயிற்றில் அரை கிலோ முடி !

சீப்பில் முடி இருந்தாலும் கூட அதையும் சாப்பிடுவார்.
முதல்முறை நடத்தப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமிக்கு மனநல சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் இவர் முடி சாப்பிட தொடங்கி விட்டார். அதனால், இம்முறை மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

From around the web