சந்திராயன் 3க்கு போட்டியாக எச் 2ஏ !! இந்தியாவை பின் தொடரும் ஜப்பான்!!

 
எச்2 ஏ

இந்தியாவின் இஸ்ரோ ஜூலை 14ம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பியுள்ளது.  அதன் லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி  மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை செய்து வருகிறது.  இதேபோல் ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்கான பயண திட்டம் உருவாக்கப்பட்டது.


இதற்காக ‘ஸ்லிம்’ என்ற விண்கலத்தை ஜப்பான் தயாரித்துள்ளது. இந்த விண்கலத்தை எச்.2.ஏ. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டது. இந்த திட்டம் பல்வேறு காரணங்களால்  3 முறை ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் ஜப்பான் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் SLIM (smart lander investigating moon) விண்கலம் இன்று செப்டம்பர்  7ம் தேதி வியாழக்கிழமை   ஏவப்பட்டது. இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் அடுத்த 4 முதல் 6 மாதங்களில் நிலவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்2 ஏ


இதையடுத்து நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. “நிலவுக்கு SLIM லேண்டர் வெற்றிகரமாக ஏவப்பட்டது. உலகளாவிய விண்வெளி சமூகத்தின் மற்றொரு வெற்றிகரமான சந்திர முயற்சிக்கு வாழ்த்துக்கள்” என இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஜப்பானின் இத்திட்டம் வெற்றி பெற்றால் நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக வெற்றி பெற்ற உலகின் 5வது நாடாக ஜப்பான் திகழும் .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web