பெரும் சோகம்... அதிகமான உடற்பயிற்சியால் ஜிம் உரிமையாளர் மயங்கி உயிரிழப்பு!
சேலம் கோட்டை பகுதியில் வசித்து வருபவர் 35 வயது மகாதிர் மகமுத்.இவர் 31வது வார்டு திமுக முன்னாள் செயலாளர். குகை ஆற்றோர வடக்கு தெருவில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். இவர், தினமும் அவருடைய ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அவர் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இரவு 8 மணிக்கு ஜிம்முக்கு வந்த அனைவரும் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சென்று விட்டனர். இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
பின்னர் ஜிம்மில் உள்ள குளியல் அறையில் குளித்தார். நீண்ட நேரமாகியும் மகாதிர் மகமுத் வெளியே வராததால் அவரது ஓட்டுநர் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூக்கு மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் மகாதிர் மூச்சுபேச்சு இல்லாமல் இருந்தார். உடனே டிரைவர் முஸ்தபா மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை தூக்கிக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை நடத்திய போது உயிரிழந்து விட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஜிம்மிற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு நீராவியில் குளித்து உள்ளார். இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து அவர் உயிரிழந்திருக்கலாம். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!