ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விரைவில் விவாகரத்து?... ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவின் பிஸியான இளம் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ். இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர். திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றியை பெறுகின்றனர். இதனால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.அதே நேரத்தில் இசையமைப்பையும் விடாமல் செய்து வருகிறார். தற்போது ஜிவி பிரகாஷ் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான், அமரன், நிலவிற்கு என் மேல் என்னடி கோவம், வீரதீர சூரன், வாடிவாசல் என பல முக்கியத் திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் மனைவி சைந்தவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றன திரைத்துறை வட்டாரங்கள். ஜிவி மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்து அப்போது முதல் இருவரும் காதலித்து 2013ல் திருமணம் செய்துகொண்டார்கள். 2020ம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
தங்களது மகளுக்கு அன்வி என்று பெயர் வைத்தனர். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமில்லாமல் திரை வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜிவி இசையமைத்த பல அழகான பாடல்களை சைந்தவி பாடியுள்ளார். யாரோ இவன், மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் என்னாச்சு ஏதாச்சு, தலைவா படத்தில் யார் இந்த சாலையோரம் என இருவரும் சேர்ந்து தங்களது குரலில் ரொமான்ஸ் செய்த பாடல்கள். இவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்து இருப்பது சினிமா பிரபலங்களை மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!