உஷார்... கொரோனாவை கொடிய நிஃபா வைரஸ்... வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல்வ் வேகமெடுத்து வருகிறது.இதனையடுத்து அங்கு தடுப்பு முறைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் நிஃபா வைரஸ் பரவலை தடுக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிஃபா வைரஸ் பரவல் கொரோனாவை விட மிக மோசமானதாக கண்டறியப்படும் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். நிபா வைரஸ் முதன் முதலில் 1998ல் மலேசியாவில் கண்டறியப்பட்டது. இது பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக சுகாதாரதுறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உட்பட விலங்குகளிடம் இருந்தும் பரவுகிறது. இந்தியாவில் 2018ல் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அப்போதே 17 பேர் இந்த நிபா வைரஸால் உயிரிழந்தனர்.
2019, 2021 மற்றும் 2023 செப்டம்பரிலும் நிஃபா வைரஸ் பரவல் கேரளாவில் இருந்தது . நடப்பாண்டிலும் மழைக்காலம் தொடங்கியதும் மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளிச்சிறுவன் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆகையால் நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி
காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை ஆகியவை நிஃபா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும்.
அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
பரிசோதனை மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத் துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும்.
ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்க வேண்டும்.
நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதிக்கப்பட வேண்டும்.
காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா