மிதக்கும் சென்னை... ஜிஎஸ்டி ரோட்டில் மீன்பிடித்த காவலர்!

 
சென்னை


 
சென்னையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாத மழை கொட்டித் தீர்த்து வருகிறது.  சென்னை ஜிஎஸ்டி சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் போலீஸ்காரர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.   தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று பிற்பகலில்  ஃபெஞ்சல் புயல் உருவானது.  இந்த புயல் இன்று பிற்பகலில்  கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  மாலையில் கரையை கடக்க உள்ளது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று மாலை புயல் கரையை கடக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.  

ஃபெங்கால் புயல்


இந்த புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில்  இன்று அதிகாலை முதல் பல இடங்களில் விட்டு விட்டு கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. மேலும் மழைநீர் வடிவதற்கான தயாரான கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் தேங்கியது.

மழை


அந்தப் பகுதியில்  தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து காவலர்கள் மழைநீர் வெளியேற வசதியாக கழிவுநீர் கால்வாயை தூர்வாரினர். இதனால் வேகமாக தண்ணீர் வடிய தொடங்கியது. இந்த வேளையில் சாலையின் நடுவே மீன் ஒன்று தத்தளித்தது. இதை பார்த்த காவலர் அதனை பிடித்து கவரில் போட்டு எடுத்து சென்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web