பெரும் அதிர்ச்சி.. பணிக்கு சென்ற விவசாயியை கொடூரமாக தாக்கிய காட்டு மாடு!
தேனி மாவட்டம், கீழ் வடகரை பெரியகுளத்தை சேர்ந்த விவசாயி நாகேந்திரன் (50) இவர் இன்று காலை வழக்கம் போல் கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோப்பில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பக்கரை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகேந்திரனை மாந்தோப்பில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு மாடு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த விவசாயி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காட்டு மாட்டை விரட்டிவிட்டு பலத்த காயமடைந்த விவசாயி நாகேந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது, காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயமடைந்த விவசாயி, பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் காட்டு மாடுகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதுடன் விவசாயிகளை தாக்கி வருவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!