பெரும் அதிர்ச்சி.. குடிக்க தண்ணீர் கேட்ட நபருக்கு ஆசிட் கொடுத்த போலீஸ்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
உத்தரபிரதேசத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி இரவு, சைட் நாக்லி காவல் நிலையத்திற்கு வெளியே இரண்டு மாணவர் குழுக்கள் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட பஞ்சுக மிலாக் கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திர சிங் என்பவர் நேரடியாகத் தலையிட்டு சண்டையை அடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை பார்த்த போலீசார், தர்மேந்திரன் உட்பட அங்கிருந்த அனைவரையும் கைது செய்து லாக்கப்பில் தங்க வைத்தனர். தர்மேந்திரா சண்டையைத் தவிர்க்க வந்ததாக போலீஸாரிடம் விளக்கம் அளிக்க முயன்றபோதும், போலீஸார் அதைக் கேட்க மறுத்ததாக தர்மேந்திராவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் தர்மேந்திரா போலீசாரிடம் குடிநீர் கேட்டுள்ளார். அப்போது, காவலர்கள் ஆசிட் கொடுத்தனர். மேலும், தர்மேந்திராவை ஆசிட்டை குடிக்குமாறு போலீசார் கட்டாயப்படுத்தினர். மேலும், புஷ்பேந்திரா கூறுகையில், "போலீஸ் லாக்-அப்பில் இருந்த போது, என் அண்ணன் தர்மேந்திரா தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, போதையில் இருந்த போலீசார், அவரை ஆசிட் குடிக்க வைத்தனர். இதனால், தற்போது அண்ணனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தர்மேந்திரனை போலீசார் தாக்கினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தர்மேந்திரா மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தர்மேந்திராவின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், “குடலில் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது; வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என கூறியுள்ளனர். இந்நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலைக்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தர்மேந்திராவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மாவட்ட அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். நியாயமான விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, லக்னோவில் போலீஸ் காவலில் மோகித் பாண்டே என்ற நபர் உயிரிழந்தார், தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!