பெரும் அதிர்ச்சி.. இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி.. 3 தொழிலாளர்கள் பலி.. 7பேர் படுகாயம்!

 
தண்ணீர் தொட்டி

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் டவுன்ஷிப்பில் உள்ள போசாரி பகுதியில் தொழிலாளர் முகாம் உள்ளது. இன்று காலை முகாமில் தற்காலிக தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். தண்ணீர் தொட்டியின் கீழ் தொழிலாளர்கள் குளித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.


சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து, பிம்பிரி சின்ச்வாட் கூடுதல் போலீஸ் கமிஷனர், வந்த் பர்தேஷி கூறுகையில், 'தண்ணீர் அழுத்தத்தால், தண்ணீர் தொட்டியின் சுவர் வெடித்து, தொட்டி இடிந்து விழுந்தது. தண்ணீர் தொட்டிக்கு கீழே இருந்த தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,   7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web