பெரும் சோகம்... மினிபேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 3 பள்ளி மாணவர்கள் பலி!

 
பேருந்து விபத்து


தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள  மம்சாபுரம் பகுதியில் மினிபேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக, பள்ளத்தில் கவிழ்ந்து கோரவிபத்து ஏற்பட்டது.  சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்புலன்ஸ்

 
மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரபிரதேச போலீஸ்


உயிரிழந்தவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள், ஒருவர் கல்லுரி மாணவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் பள்ளி நேரங்களான காலை மாலை இரு வேளைகளிலும் கூடுதல் பேருந்து இயக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web