பெரும் சோகம்... மனைவி, மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து தொழிலாளி தற்கொலை முயற்சி!
கரூர் மாவட்டத்தில் வெங்கமேடு விவிஜி நகரில் வசித்து வருபவர் 44 வயது செல்வ கணபதி. இவர் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 40 வயது கல்பனா . இவர்களுடைய மகள் 6 வயது சாரதி பாலா. இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.இதில் செல்வ கணபதிக்கு தீராத நோய் ஒன்று இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. செல்வகணபதியை அப்பகுதியினர் கேலி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
நோய்க்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வாழ்வில் விரக்தியடைந்த செல்வகணபதி சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திடீரென மனைவி கல்பனாவையும், மகள் சாரதி பாலாவையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். வீட்டில் இருந்த கொசு மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தானும் குடித்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு கல்பனா மற்றும் சாரதி பாலா இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயற்சி செய்த கணேசையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தகராறில் மனைவியையும் மகளையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி, தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!