பெரும் சோகம்... மின்சாரம் தாக்கியதில் பலியான தம்பி... உடல் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்சில் மின்கசிவால் அக்காவும் பலி!

 
சுந்தரி

 தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்  அணியமங்கலம் கிராமத்தில் மின் துறையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருபவர் குருமூர்த்தி . இவர்  மின்மாற்றியில் பணியாற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊரான அணியமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு  கொண்டுவரப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ்

 அப்போது குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் கசிவு காரணமாக குளிர்சாதனப் பெட்டியை பிடித்திருந்த ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.  இவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு உடனடியாக  கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குருமூர்த்தியின் சகோதரி 50 வயது சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சடலம்

அத்துடன் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அபர்ணா, பாக்கியலட்சுமி, அகத்தியா, உமாராணி, துர்காதேவி ,ஜெயசுதா  என 6 பேர் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web