பெரும் பரபரப்பு.. இன்ஸ்டா காதலனுக்காக கணவரை கழட்டி விட்டு தமிழகம் வந்த இளம்பெண்!

 
இன்ஸ்டா காதல்

மேற்கு வங்க மாநிலம் மேகன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மலிகான் (24). இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா பால் (20). இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார்கள். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி காதலிக்க ஆரம்பித்தனர். அதன்பிறகு மலிகானும் சுஷ்மிதா பாலும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி ஏற்கனவே திருமணமான சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி கடலூர் வந்தார். இங்கு கடந்த 1ம் தேதி திருமணம் முடிந்து புதுப்பாளையத்தில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இன்ஸ்டா

இதனிடையே, தனது மகளைக் காணவில்லை என சுஷ்மிதாபாலின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், செல்போன் மூலம் சுஷ்மிதாபால் கடலூரில் இருப்பது தெரியவந்தது. அதன்படி அசாம் மாநிலத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார், சுஷ்மிதாபாலின் தந்தை உள்பட 4 பேர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கடலூர் புதுநகர் போலீஸார் உதவியுடன், அசாம் மாநில போலீஸார் புதுப்பாளையம் சென்று, அங்கிருந்த சுஷ்மிதா பால், மலிகான் ஆகிய 2 பேரையும் புதுநகர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.

விசாரணையில், சுஷ்மிதா பால் தனது தந்தையுடன் செல்ல மறுத்துவிட்டார். ஒரு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், கணவருடன் வாழ விரும்புவதாகவும் சுஷ்மிதா தெரிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு சுஷ்மிதாபாலை மலிகானுடன் அஸ்ஸாம் போலீசார் அனுப்பி வைத்தனர். தான் இங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் சுஷ்மிதா பால் அசாம் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் இன்னும் ஒரு நாள் தங்கி சுஷ்மிதா பாலின் மனம் மாறுமா என்று பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுஷ்மிதாவின் தந்தையும், அசாம் போலீசாரும் கடலூரில் தங்கியுள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web