பெரும் பரபரப்பு.. கூகுள் பே கோளாறால் கலவரமான குற்றாலம்.. ஷாக் பின்னணி!

 
குற்றாலம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் குற்றாலமும் ஒன்று. இங்குள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளிக்க வருகின்றனர்.  குறிப்பாக விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் குற்றாலம் செல்லும் சாலைகளில் உள்ள கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவி நுழைவு வாயில் அருகே உள்ள கடையில் உணவு உண்டு, அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் அனுப்பியதாக தெரிகிறது.

கூகுள் பே மூலம் பணம் அனுப்பும் போது கடை உரிமையாளருக்கு பணம் மற்றும் ஒலிபெருக்கி குறித்து எந்த செய்தியும் வரவில்லை என தெரிகிறது. ஆனால் பணம் அனுப்பியதாக உணவருந்தியவர்கள் கூறியும் அதை ஏற்க மறுத்த உரிமையாளர்  எனக்கு பணம் வரவில்லை, நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணிகளுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால், சுற்றுலா பயணிகள் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. ஆட்டோ ஓட்டுனர்களும், பொதுமக்களும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றபோது, ​​இரு தரப்பினரும் சாலையில் ஒருவரையொருவர்  மோதிக்கொண்டனர். தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலை தடுக்க முயன்றனர்.

பின்னர் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். ஆன்லைனில் பணம் அனுப்புவதில் ஏற்பட்டுள்ள நெட்ஒர்க் பிரச்னையால், பணம் தாமதமாக வந்ததாக சில சமயங்களில் மெசேஜ் வருவதும், சிறு பிரச்னைக்காக இரு தரப்பினரும் சாலையில் சண்டையிட்டுக் கொள்ளும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் குற்றாலம் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதால், உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் போலீசாரை நியமிக்க சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web