பெரும் பரபரப்பு.. பெட்ரோல் நிலையத்தில் திடீரென பற்றி எரிந்த ஆம்னி வேன்.. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்!

 
உக்கடம் ஆம்னி வேன்

கோவை உக்கடம் பகுதியில் 3 ஆட்டோ எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் உள்ளன. 2 பெட்ரோல் நிலையங்கள் மற்றும் 1 சிஎன்ஜி எரிவாயு நிலையம் செயல்படுகின்றன. இந்நிலையில் இன்று சிஎன்ஜி எரிவாயு மையத்திற்கு காஸ் நிரப்ப ஆம்னி வேன் வந்துள்ளது. அப்போது ஆம்னி வேனின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக ஆம்னி வேனை, பங்க் அருகே நிறுத்தி, உள்ளே இருந்த டிரைவர் தப்பியோடிவிட்டார்.

இதில் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. இதையடுத்து அங்கிருந்த பங்க் ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆம்னி வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனத்தின் உரிமையாளர் யார்? தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

3 பெட்ரோல் நிலையங்கள் உள்ள பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மேலும், அப்பகுதியில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து, அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web