அரசு மருத்துவமனை அலப்பறைகள்.. நோயாளிக்கு ட்ரிப்ஸ் ஏற்றிய தூய்மை பணியாளர்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலைமை அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 400க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு நேரங்களில் இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
அவசர சிகிச்சைக்கு வந்த பெரியவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுவதை சரிபார்த்த தூய்மை பணியாளர்.. அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்#Tiruvallur | #GovtHospital | #CleaningStaff | #Glucose | #PolimerNews pic.twitter.com/Zg7RfonbIR
— Polimer News (@polimernews) August 23, 2024
இதுதவிர, ஆண்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இரவு நேரத்தில் ஊசி, குளுக்கோஸ் சிகிச்சையை துப்புரவு பணியாளர்கள் வழங்கி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாக பரவி வரும் இந்த வீடியோ திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் உயிரை பயமுறுத்தியுள்ளது.
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தலைமை மருத்துவர் கல்பனாவிடம் கேட்டபோது... “இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். சம்பவம் நடந்த போது பணியில் இருந்த செவிலியரிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்களை இவ்வாறு ஈடுபடுத்துவது தவறு, எனவே சம்பந்தப்பட்ட செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது,'' என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!