குட்நியூஸ்! இந்தியாவிற்கான பயண தடை நீக்கம்!

 
குட்நியூஸ்! இந்தியாவிற்கான பயண தடை நீக்கம்!


உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக உலகப் பொருளாதாரம் பெரும் பின்னடவை சந்தித்து வருகிறது. இதன் பாதிப்புக்களின் அடிப்படையில் சா்வதேச பயண விதிமுறைகளும் மாற்றியமைக்கப் பட்டுள்ளன.அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குட்நியூஸ்! இந்தியாவிற்கான பயண தடை நீக்கம்!

அதன்படி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதில் இந்தியர்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 4 , முழு அளவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்துக்கு வருகை தரலாம். பயண நேரத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளையும் மேற்கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.

குட்நியூஸ்! இந்தியாவிற்கான பயண தடை நீக்கம்!


சா்வதேச நாடுகள் அனைத்தையும் பாதிப்புக்களை பொறுத்து சிவப்பு, ஆம்பர் (பொன்நிறம்) மற்றும் பச்சை என பல வண்ணங்களில் வரிசைப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் இந்தியா ஆம்பர் வண்ண பட்டியலில் இருந்தது. சிவப்பு, ஆம்பர் வண்ண நாடுகளை சோந்தவா்கள் இங்கிலாந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பயண தடை பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் உட்பட 8 நாடுகள் இன்னும் உள்ளன.

From around the web