குட் நியூஸ்... ஏப்ரல் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு... உடனே ரேஷன் கார்டுகளை அப்டேட் செய்ங்க!

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து ரேஷன்கார்டுகள் 5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கார்டு கேஓய்சி சரிபார்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருமே தங்களுடைய குடும்ப உறுப்பினர்களோடு கேஒய்சி சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது.
இதனை மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது. மத்திய அரசு கேஒய்சி சரிபார்ப்புக்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30 வரை நீட்டித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 31 தான் கடைசி தேதி என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!