நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்.. 1,00,008 வடை மாலை! ராம நவமியில் குவியும் பக்தர்கள்!

இன்று ராம நவமி தினத்தை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பக்தர்கள் ராம நவமியை முன்னிட்டு அனுமன் ஆலயங்களிலும், விஷ்ணு கோவில்களிலும் அதிகளவில் தரிசித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் ஆன மாலை சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலையிலேயே அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயருக்கு, அதன் பின்னர் மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலிக்க உள்ளார்.
இன்று இரவு 10 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம நவமியை முன்னிட்டு, 2 டன் எடையுள்ள பல்வேறு வாசனை மலர்களால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!