தங்கம் விலை ரூ18000 வரை உயர வாய்ப்பு... பொருளாதார வல்லுனர்கள் கருத்துக்கணிப்பு!
இந்தியாவில் 2024-25 பொது பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 4,000 வரை குறைந்திருந்தது. விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சர்வதேச விலைகள் மீதான அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இது ஒரு நல்ல கொள்முதல் வாய்ப்பு என நிபுணர்கள் தெரிவித்தனர். முதலீட்டாளர்கள் இப்போது தங்கத்தை வாங்கி ரூ72000க்கு விற்பனை செய்யலாம். ஏனெனில் உலகளாவிய குறிப்புகள் காரணமாக விலைகள் அந்த அளவில் அழுத்தத்திற்கு உள்ளாகலாம்.
“சமீபத்தில் தங்கத்தின் விலை ரூ.75,000ல் இருந்து சுமார் ரூ.70,000க்கு குறைந்திருப்பது முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட காமெக்ஸ் தங்கம் சமீபத்தில் முதல் முறையாக $2,500ஐ எட்டிய நிலையில், இந்த வீழ்ச்சியானது ரூபாய் மதிப்பில் ஒரே நாளில் ரூ.4,200 குறைந்துள்ளது. வாங்குபவர்கள் தங்கத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக ஈக்விட்டிகள் மீதான அதிக மூலதன ஆதாய வரிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அந்த சொத்து வகுப்பில் வருமானத்தைக் குறைக்கலாம்,” என்று LKP செக்யூரிட்டிஸின் ஆராய்ச்சி துணைத் தலைவர் ஜதீன் திரிவேதி கூறினார்.
தற்போதைய நிலவரப்படி தலைநகர் டெல்லியில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.68,100 மற்றும் 67,800 ஆக உள்ளது. வெள்ளி தற்போது கிலோவுக்கு 82,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 600 புள்ளிகளின் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தங்கத்தின் விலை ரூ.18,000 உயரும் வாய்ப்பு உள்ளது.
தங்கத்தின் மீதான விற்பனை ரூ72000ஐ தொட்ட பிறகு மீண்டும் குறையலாம் என்கின்றனர் முதலீட்டாளர்கள்.